Saturday, August 27, 2011

விண்டோஸ் 7

விண்டோஸ் 7 சிஸ்டத்திற்குப் பலரும் மாறி வருகின்றனர். புதிய கணணி வாங்கும் அனைவரும், விண்டோஸ் 7 சிஸ்டம் தான் இருக்க வேண்டும் எனக் கேட்டு வாங்கிப் பயன்படுத்தி வருகின்றனர்.

எனக்கு விண்டோஸ் எக்ஸ்பியே போதும் என பன்னாட்டளவில் இருந்த தயக்கம் மறைந்து தற்போது விண்டோஸ் 7 ஓபரேட்டிங் சிஸ்டம் வேகமாக இடம் பிடித்து வருகிறது. இந்த சிஸ்டம் தரும் சில புதிய வசதிகள் இங்கு பட்டியலிடப்பட்டுள்ளன.

1. பின் அப் (Pin Up): நீங்கள் அடிக்கடி பயன்படுத்தும் கோப்பறைகளை டாஸ்க் பாரில் வைத்து இயக்க விண்டோஸ் 7 வழி கொண்டுள்ளது. நீங்கள் விரும்பும் கோப்பறையில் மவுஸை வைத்து, ரைட் கிளிக் செய்து அப்படியே டாஸ்க் பாருக்கு இழுத்து விட்டுவிடவும்.

2. அப்ளிகேஷன் புரோகிராம் ஒன்றினை இயக்கிக் கொண்டிருக்கையில் எளிதாக அதில் வேலை செய்திட இன்னொரு விண்டோவிலும் அதே அப்ளிகேஷன் புரோகிராமினை இயக்க விரும்புவீர்கள். இதற்கு அந்த அப்ளிகேஷன் புரோகிராம் இடம் தருமானால் ஷிப்ட் கீயை அழுத்திக் கொண்டு டாஸ்க் பாரில் உள்ள அந்த புரோகிராமின் ஐகானில் கிளிக் செய்திடவும்.

3. விண்டோஸ் 7 சிஸ்டத்தின் மூலம் மிகத் தெளிவான துல்லியமான காட்சியைத் திரையில் பெறலாம். இதன் மூலம் டெக்ஸ்ட் மற்றும் படங்களில் உள்ள நுண்ணிய தகவல்களைத் தெளிவாகப் படித்துத் தெரிந்து கொள்ளலாம்.

குறிப்பாக இந்த வசதி மடிக்கணணிகளில் உதவியாய் இருக்கும். டெக்ஸ்ட் துல்லியமாகக் காட்டப்படவும், படங்கள் தெளிவாகத் தெரியவும் இரண்டு சிஸ்டம் பைல்கள் இதற்கு உதவுகின்றன. அவை cttune.exe (Clear Type Text Tuning) dccw.exe (Display Color Calibration): நேரடியாக இவற்றை இயக்கலாம் அல்லது கண்ட்ரோல் பேனலில் இவற்றைக் காணலாம்.

4. டாஸ்க் பாரில் ஐகான்களை எந்த வரிசையில் அமைக்க வேண்டும் என விண்டோஸ் 7 சிஸ்டம் நமக்கு உதவிடுகிறது. அவற்றின் ஐகான் மீது கர்சரைக் கொண்டு சென்று இழுத்து விடுவதன் மூலம் இதனை மேற்கொள்ள லாம். முதல் ஐந்து ஐகான்களில் உள்ள புரோகிராம்களை இயக்க சில கீகளை அழுத்தி இயக்கநிலைக்குக் கொண்டு வரலாம்.

எடுத்துக்காட்டாக முதலில் காணப்படும் ஐகானில் உள்ள புரோகிராமினை இயக்க விண்டோஸ் கீ +1 அழுத்த வேண்டும். இரண்டாவது ஐகான் புரோகிராமினை இயக்க விண்டோஸ் கீ+2 அழுத்த வேண்டும்.

5. டாஸ்க் பாரில் கவனம் செலுத்தி அங்கு இயக்கத்தினை மேற்கொள்ள விண்டோஸ் கீ + T அழுத்த வேண்டும். இப்போது டாஸ்க் பார் மெனு கிடைக்கும். பின்னர் அம்புக் குறி கீகளைப் பயன்படுத்தி புரோகிராமினைத் தேர்ந்தெடுத்து என்டர் செய்தால் போதும். இந்த விளைவிலிருந்து விடுபட எஸ்கேப் கீயை அழுத்தினால் போதும்.

6. ஹெல்ப் டெஸ்க் எனப்படும் உதவிடும் குறிப்புகளை விண்டோஸ் 7 சிஸ்டம் நமக்கு கணணியிலேயே வழங்குகிறது. “fix” அல்லது “Troubleshoot” என ஸ்டார்ட் மெனுவில் டைப் செய்தால் பலவகையான பிரச்னைகளுக்குத் தீர்வு தரும் பிரிவுகள் காட்டப்படுகின்றன. இவற்றில் எந்த பிரச்னைக்குத் தீர்வு வேண்டுமோ அந்தப் பிரிவைத் தேர்ந்தெடுத்து கிளிக் செய்து தீர்வைத் தெரிந்து கொள்ளலாம்.

விண்டோஸ் 7 தரும் புதிய கூடுதல் வசதிகள் இன்னும் நிறைய உள்ளன. இவற்றைத் தெரிந்து கொள்வதனாலேயே இந்த ஆப்பரேட்டிங் சிஸ்டம் மீது ஈர்க்கப்பட்டு பலர் இதற்கு மாறி வருகின்றனர்.

Tuesday, July 20, 2010

டாப் 10 சோஷியல் நெட்வொர்க் தளங்கள்
நட்பு வட்டங்க்களை உருவாக்கி கருத்துக்களையும் பிறவற்றையும் பகிர்ந்து கொள்ள பல சோஷியல் நெட்வொர்க் தளங்கள் இயங்குகின்றன. இவற்றுள் எது சிறந்தது என்று ஆய்வு செய்ய முடியவில்லை. அண்மையில் விக்கிபீடியா மேற்கொண்ட ஆய்வின் முடிவுகள் பின்வருமாறு.

1. FACE BOOK
ஏறத்தாழ 40 கோடிக்கு மேலான எண்ணிக்கையில் வாடிக்கையாளர்கள்
உள்ளனர். ஒவ்வொரு நாளும் இந்த எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே உள்ளது.

2. QZONE
இது சீன மொழி தெரிந்தவர்கள் மட்டுமே பயன்படுதக்கூடிய தளம். இதன் உறுப்பினர்களின் எண்ணிக்கை 20 கோடிக்கு மேல்.

3. HABBO
இது முற்றிலும் இளைஞர்களுக்கான தளம். இதில் 16 கோடியே 20 லட்சம் பேர் உறுப்பினர்களாக உள்ளனர்.

4. MY SPACE
பேஸ்புக்கிற்கு முன்னால் இதுதான் பலரின் விருப்பமான தளம். இசை குறித்த தகவல்களைப் பகிர்ந்துகொள்ள விரும்பும் இளைஞர்களுக்கு விருப்பமான தளம் இது. 13 கோடிக்கும் மேலான வாடிக்கையாளர்கள் உள்ளனர்.

5. WINDOW LIVESPACES
12 கோடிக்கும் அதிகமான எண்ணிக்கையில் உறுப்பினர்கள் உள்ள இந்த தளத்திற்கு உலகெங்கிலும் ரசிகர்கள் உள்ளனர்.

6. ORKUT
இந்தியா மற்றும் பிரேசிலில் மிக அதிகமாக பயன்படுத்தப்படும் தளம். குறிப்பாக மேற்கத்திய நாடுகளிலிருந்து அவ்வளவாக உறுப்பினர்கள் இல்லை. ஆயினும் இதன் உருப்பினர்களின் எண்ணிக்கை 10 கோடியை தாண்டியுள்ளது.

7. FRIENDSTER
ஒரு காலத்தில் சோஷியல் நெட்வொர்க் தளம் என்றால் இதுதான் என்றிறுந்தது.இதில் உள்ள 9 கோடிக்கும் மேலான வாடிக்கையாளர்கள் இன்னும் இதில் செயல்படுகின்றனரா என்பது கேள்விக்குறியே. எனினும் தென் கிழக்கு ஆசிய நாடுகளின் இது இன்றளவும் பிரபலமே.


8. HI 5
தாய்லாந்து, ரொமானியா மற்றும் போர்ச்சுகள் போன்ற நாடுகளில் இது மிகவும் புகழ் பெற்ற சோஷியல் நெட்வொர்க் தளமாகும். இதன் 8 கோடி உறுப்பினர்கள் பெரும்பாலும் இந்தியா, மத்திய ஆப்பிரிக்கா, லத்தீன் அமெரிக்க நாடுகளில் உள்ளனர்.


9. TWITTER
இந்த சோஷியல் நெட்வொர்க் தளங்கள் குறித்த ஆய்வு தொடக்கத்தில் ட்விட்டர் தான் முதலிடம் பிடிக்கும் என பலரும் எண்ணினர். ஆனால் உறுதியாக இன்னும் சில ஆண்டுகளில் இது முதலிடம் பிடிக்கும். இதன் உறுப்பினர்கள் ஏறத்தாழ 8 கோடி பேர்.

10. VKON TAKTE
இத்தளத்தை ரஷ்ய மொழி தெரிந்தவர்கள் மட்டுமே பயன்படுத்த இயலும். கிழக்கு ஐரோப்பிய நாடுகளில் உள்ளோர்களும் இதனை பயன்படுத்தி வருகின்றனர்.இதில் 7 கோடியே 22 லட்சம் பேர் உறுப்பினர்களாக உள்ளனர்.

இந்த ஆய்வில் யு-ட்யூப் தளம் ஏன் சேர்த்துக்கொள்ளப்படவில்லை என்று தெரியவில்லை. பட்டிருந்தால் அந்த தளம் நிச்சயமாய் பட்டியலில் முதல் இடத்தை பிடித்திருக்கும்

Saturday, April 24, 2010

விண்டோஸ் XP பயனாளரின் நுழைவுச்சொல்லை எவ்வாறு மாற்றுவது?

HOW TO CRACK XP PASSWORD
உங்கள் கணினி பூட் ஆன பின்பு LOGON SCREEN தோன்றி நுழைவுச்சொல்லை கேட்கும்.

அப்போது Ctrl + Alt + 2 முறை Del கீக்களை அழுத்தினால் தோன்றும் திரையில் பயனாளர் பெயரில் Administrator என டைப் செய்து ENTER கீயை அழுத்தவும். பிறகு START மெனுவில் உள்ள RUN கமாண்டில் CMD என டைப் செய்து OK கொடுக்கவும்.

கமாண்ட் ப்ராம்டில் cd \ என டைப் செய்து ENTER கொடுக்கவும்.
பிறகு net user என்று டைப் செய்து ENTER கொடுக்கவும்
அது உங்கள் கணினியில் உள்ள அனைத்து பயனாளர்களின் பெயர்களையும் காட்டும். எந்த பயனாளரின் நுழைவுச்சொல்லை மாற்ற வேண்டுமோ அவர் பெயரை பின்வருமாறு கொடுக்க வேண்டும்.


net user user_name * ENTER


user_name என்ற இடத்தில் யாருடைய நுழைவுச்சொல்லை மாற்ற போகிறோமோ அந்த பெயரை கொடுக்க வேண்டும். அது உங்களை புதிய நுழைவுச்சொல்லை (PASSWORD ) கேட்கும். நுழைவுச்சொல் தந்து ENTER கொடுத்தால்


அவ்வளவு தான் அந்த பயனாளரின் PASSWORD ஐ மாற்றி நீங்களும் ஒர் ஹேக்கர் ஆகிவிட்டீர்கள்,
வாழ்த்துக்கள் ! !!

குறிப்பு : நீங்கள் PASSWORD மற்றும் CONFIRM PASSWORD கொடுக்கும் போது அது உங்கள் கண்களுக்கு தெரியாது.

பாதை மாறும் சோஷியல் நெட்வொர்க் தளங்கள்

கடந்த ஆண்டு இணையத்தில் சமுதாய தளங்கள் என்று அழைக்கப்படும் சோஷ்யல் நெட்வொர்க் தளங்களுக்கு ஒரு சிறப்பான ஆண்டாக அமைந்திருந்தது. பேஸ்புக் மற்றும் ட்விட்டர் போன்ற தளங்களின் அமைப்பிலும், உட்பொருளிளும் பெருத்த மாற்றங்களும் முன்னேற்றமும் ஏற்பட்டன. இது தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் வெளியிடப்பட்ட முடிவுகள்.

இதுவரை என்ன சாப்பிட்டேன்; எந்த தேர்வில் பிரச்சனை அதிகம் இருந்தது; விஜய் படங்கள் ஏன் சரியாக ஓடுவத்தில்லை போன்ற கதைகளை பேசிக்கொண்டு இருக்காமல் உலகத்தை பாதித்த, பாதிக்கின்ற விஷயங்கள், அரசியல் மாற்றங்கள், விமான விபத்துக்கள் போன்றவை அதிகம் இடம்பெற்றன.

பொதுவாக இளைஞர்களும், டீன் ஏஜ் கல்லூரி மாணவர்களும் அதிகம் பயன்படுத்திக்கொண்டிருந்த இந்த சோஷியல் தளங்களில் பல அறிஞர்களும், எழுத்தாளைகளும் எழுத தொடங்கினார்கள். இதனால் பழைய தலைமுறைக்கும் புதிய தலைமுறைக்கும் இடையே நல்ல ஆரோக்கியமான நட்பு ஏற்பட்டது,

இந்த தளங்களை பயன்படுத்தும் இணைய பயனாளர்களின் எண்ணிக்கை 2009 ல் அதிகமாகியது. இந்த ஆண்டின் தொடக்கத்தில் பேஸ்புக் தனது 35 ஆவது கோடி பயனாளியை அடையாளம் காட்டியது.

பேஸ்புக் நேயர்களின் எண்ணிக்கை உயர்ந்தது என்றால், நிச்சயம் வேறு ஒரு தளத்திலிருந்து இங்கு வந்தவர்களாகத்தான் இருப்பார்கள். இவர்களில் பலர் மை ஸ்பேஸ் ( MY SPACE ) தளத்திலிருந்து வந்தனர். சோஷியல் நெட்வொர்க்கிங் தளங்களில் முன்னணி தளமாக முதலில் வந்த சிலவற்றில் ஒன்றாகும் இது. ஆனால் 2009 ஆம் ஆண்டில் இதன் பங்கு 55 சதவிதத்திலிருந்து 30.26 சதவீதமாக குறைந்தது.

இந்த ஆண்டில் இந்த இரு தளங்களும் தங்கள் வருமானத்தை பெருக்கும் முயற்சியில் ஈடுபடும் எனத் தெரிகிறது. அதற்கான முயற்சிகளில் பல ஒப்பந்தங்களில் இவை ஈடுபட்டு வருகின்றன.

Saturday, April 17, 2010

ஹேக்கர்களின் அட்டகாசம்


கோடிக்கணக்காண மக்கள் இன்று ட்விட்டர் சேவையை பயன்படுத்தி வருகிரார்கள். மிக சிறிய செய்திகளை கூட பரிமாறிக் கொள்வதற்கு அல்லது சில செய்திகளை பரவ செய்வதற்கு இது அதிகம் பயன்படுத்தப்படுகிறது. இந்த சேவை தற்சமயம் பெரிய ஆபத்தில் சிக்கியுள்ளது. இந்த சேவைக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என்றாலும் அதை பயன்படுத்துபவர்களின் தனிப்பட்ட தகவல்கள் அதிகம் திருட்டு போகிறது.

ஒரு மாதத்திற்க்கு முன்பு தான் இந்த மோசடி அம்பலத்துக்கு வந்தது. ஒரு ஹேக்கர், ட்விட்டர் நிறுவனத்தில் பணிபுரியும் ஒருவருடைய மின்னஞ்சல் கணக்கை திருடி, டிஜிட்டல் நிர்வாகப்பகுதிக்குல் சென்றுவிட்டார். அந்த நபர் பின்பு பிடிபட்டார். அவர் அளித்த வாக்குமூலத்தின் படி , இதுவரை 300க்கும் மேற்பட்ட ட்விட்டர் பயனாளர்களின் ஆவணங்களை திருடியிருக்கிறார். இதில் ட்விட்டரின் இரகசிய ஆவணங்களும் அடங்கும். பயனர் கணக்குகள், மற்ற நிறுவனங்களுடனான ஒப்பந்தங்கள் ஆகியவற்றையும் திருடியிருக்கிறார்.

ஒரு பயனர் எந்த நேரத்தில் என்ன செய்வார், அவர் வங்கிக்கணக்கில் எவ்வளவு பணம் இருக்கிறது என்ற தகவல்களை கூட தன் விரல்நுனியில் வைத்திருக்கிறார்இந்தளவுக்கு ட்விட்டரின் பாதுகாப்பு பலவீனமாக இருந்ததாக அந்த நிறுவனமே ஒப்புக்கொண்டது இப்போது இந்த பிரச்சனை பூதாகரமாக வெடித்துள்ளது. இன்னும் ஏராளமானோர் ஹேக்கிங்கில் விளையாடிக்கொண்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
நாளுக்கு நாள் பெருகிவரும் ஹீக்கர்களின் அட்டகாசம் யூடியூப் சேவையைகூட விடவில்லை. சில நாட்களுக்கு முன்னர் யூடியூப்பையும் ஒரு கை பார்த்துள்ளனர்.

யூடியூப் இணையதளத்தை திறந்தால் Youtube is currently experiencing some downtime issues, reporting a "Http/1.1 Service Unavailable" error or a 500 Internal Server Error. இப்படி ஒரு செய்தி தெரிந்தது. உலகத்தின் பல பகுதிகளிலிருந்தும் யூடியூப் தளத்தினை திறந்தவர்கள் ஒன்றும் புரியாமல் விழித்தனர். ஒருவர், ட்விட்டரில் எனக்கு இங்கு யூடியூப் தெரியவில்லை என்று ஒரு ட்விட்டை தட்டி விட விஷயம் காட்டுத்தீ போல் பரவ ஆரம்பித்தது.

சரியாக 20 நிமிடம் ஒன்றும் செய்ய முடியவில்லை. அடுத்து உடனடியாக கூகுள் இந்த பிரச்சினையை பெரிதாகும் முன் சரிசெய்தது இப்படியே போனால் இணையம் என்ற வார்த்தையை கேட்டாலே பயந்து ஓடும் அளவுக்கு முக்கிய சேவைகள் ஸ்தம்பிக்கும் என்று நிபுணர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.
இந்த சிக்கலை உடனடியாக கவனிக்காமல் விட்டால் தங்களது பயனாளர் எண்ணிக்கை பாதிக்குமேல் குறைந்துவிடும் என்ற அச்சத்தால், என்ன செய்வது என்று நிறுவனங்களும் தீவிரமாக ஆலோசித்து வருகின்றன.

விண்டோசை விட லினக்ஸ் ஏன் சிறந்தது?

 • லினக்ஸ் இயங்குதளம் முற்றிலும் இலவசமாகும். இணையத்தில் இருந்து தரவிறக்கம் செய்து பயன்படுத்திக்கொள்ளலாம்.

 • வைரஸ் பிரச்சனைகள் கிடையாது. மைக்ரோசாப்ட் நிறுவனத்துடைய முதன்மை அலுவலர் Steve Balmer கூறுகிறார் வைரஸ்தாக்குதலை முற்றிலுமாக விண்டோஸ் இயங்க்குதளத்தில் ஒழிக்கமுடியாது என்று.
 • விண்டோஸ் இயங்குதளத்தில் உள்ளது போன்று Spyware தாக்குதல்கள் லினக்ஸில் கிடையாது.
 • லினக்ஸ் இயங்குதளங்கள் Crash ஆகாது.
 • புதிய வன்பொருள்களை கணினியில் இணைத்தால் கணினியை மறுதொடக்கம் (REBOOT) செய்ய வேண்டிய அவசியம் இல்லை.
  லினக்ஸ் இயங்குதளத்தை பயன்படுத்தினால் பற்றி கவலைபடத் தேவையில்லை.
 • லினக்ஸ் இயங்குதளத்தினால் 100 க்கும் மேற்பட்ட File System ( FAT32, NTFS, EXT3, EXT4, EXT2, VFAT etc...) படிக்க முடியும். விண்டோஸ் இயங்குதளத்தினால் அதனுடைய இரண்டு File System ( FAT32, NTFS) ஆகியவற்றை மட்டுமே படிக்க முடியும்.
 • விண்டோஸ் இயங்குதளத்தை Primary Partition -ல் மட்டுமே நிறுவ முடியும். லினக்ஸ் இயங்குதளங்களை Logical Partition லும் நிறுவமுடியும்.
 • லினக்ஸ் இயங்குதளங்கள் PDA, CELLPHONES, SUPER COMPUTERS ஆகியவற்றிலும் இயங்குகிறது.
 • லினக்ஸ் இயங்குதளங்களை உங்களுடைய நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளலாம். ஆனால் விண்டோஸ் இயங்குதளங்கள், அதன் மென்பொருள்கள் ஆகியவற்றை பகிர்ந்துகொண்டால் அது சட்ட விரோதமாகும்.
 • லினக்ஸ் இயங்குதளங்களை கணினியில் நிறுவாமல் நிகல் வட்டாக பயன்படுதிக்கொள்ளலாம் (LIVE CD).
 • லினக்ஸ் இயங்குதளங்கள் இருப்பியல்பாக virtualization ( XEN / KVM / VirtualBox / etc..) மென்பொருள்களுடன் வருகிறது. இதன் மூலம் பல இயங்குதளங்களை லினக்ஸ் இயங்குதளத்தின் உள்ளேயே நிறுவி பயன்படுத்திக்கொள்ளலாம்.
 • லினக்சினுடைய Kernel நிறைய வன்பொருள்களுக்கான Drivers களுடன் வெளியிடப்படுகிறது. ஆனால் விண்டோஸ் இயங்குதளத்தில் நீங்கள் Driver CD தனியாக வைத்திருக்க வேண்டும்.
 • லினக்ஸ் இயங்குதளங்கள் ஆயிரக்கணக்கான உள்ளூர் மொழிகளிலும் வெளிவருகிறது. உங்களுடைய மொழியில் நீங்கள் லினக்ஸ் இயங்குதளத்தை பயன்படுத்திக்கொள்ளலாம்.
 • லினக்ஸ் உங்களுக்கு முழுமையான சுதந்திரத்தை அளிக்கிறது.
 • உபுண்டு லினக்ஸ் குறுவட்டுக்களை (BOOT CD) www.ubuntu.com என்ற இணையதளத்தில் இருந்து இலவசமாக பெறமுடியும்.