Saturday, April 17, 2010

ஹேக்கர்களின் அட்டகாசம்


கோடிக்கணக்காண மக்கள் இன்று ட்விட்டர் சேவையை பயன்படுத்தி வருகிரார்கள். மிக சிறிய செய்திகளை கூட பரிமாறிக் கொள்வதற்கு அல்லது சில செய்திகளை பரவ செய்வதற்கு இது அதிகம் பயன்படுத்தப்படுகிறது. இந்த சேவை தற்சமயம் பெரிய ஆபத்தில் சிக்கியுள்ளது. இந்த சேவைக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என்றாலும் அதை பயன்படுத்துபவர்களின் தனிப்பட்ட தகவல்கள் அதிகம் திருட்டு போகிறது.

ஒரு மாதத்திற்க்கு முன்பு தான் இந்த மோசடி அம்பலத்துக்கு வந்தது. ஒரு ஹேக்கர், ட்விட்டர் நிறுவனத்தில் பணிபுரியும் ஒருவருடைய மின்னஞ்சல் கணக்கை திருடி, டிஜிட்டல் நிர்வாகப்பகுதிக்குல் சென்றுவிட்டார். அந்த நபர் பின்பு பிடிபட்டார். அவர் அளித்த வாக்குமூலத்தின் படி , இதுவரை 300க்கும் மேற்பட்ட ட்விட்டர் பயனாளர்களின் ஆவணங்களை திருடியிருக்கிறார். இதில் ட்விட்டரின் இரகசிய ஆவணங்களும் அடங்கும். பயனர் கணக்குகள், மற்ற நிறுவனங்களுடனான ஒப்பந்தங்கள் ஆகியவற்றையும் திருடியிருக்கிறார்.

ஒரு பயனர் எந்த நேரத்தில் என்ன செய்வார், அவர் வங்கிக்கணக்கில் எவ்வளவு பணம் இருக்கிறது என்ற தகவல்களை கூட தன் விரல்நுனியில் வைத்திருக்கிறார்இந்தளவுக்கு ட்விட்டரின் பாதுகாப்பு பலவீனமாக இருந்ததாக அந்த நிறுவனமே ஒப்புக்கொண்டது இப்போது இந்த பிரச்சனை பூதாகரமாக வெடித்துள்ளது. இன்னும் ஏராளமானோர் ஹேக்கிங்கில் விளையாடிக்கொண்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
நாளுக்கு நாள் பெருகிவரும் ஹீக்கர்களின் அட்டகாசம் யூடியூப் சேவையைகூட விடவில்லை. சில நாட்களுக்கு முன்னர் யூடியூப்பையும் ஒரு கை பார்த்துள்ளனர்.

யூடியூப் இணையதளத்தை திறந்தால் Youtube is currently experiencing some downtime issues, reporting a "Http/1.1 Service Unavailable" error or a 500 Internal Server Error. இப்படி ஒரு செய்தி தெரிந்தது. உலகத்தின் பல பகுதிகளிலிருந்தும் யூடியூப் தளத்தினை திறந்தவர்கள் ஒன்றும் புரியாமல் விழித்தனர். ஒருவர், ட்விட்டரில் எனக்கு இங்கு யூடியூப் தெரியவில்லை என்று ஒரு ட்விட்டை தட்டி விட விஷயம் காட்டுத்தீ போல் பரவ ஆரம்பித்தது.

சரியாக 20 நிமிடம் ஒன்றும் செய்ய முடியவில்லை. அடுத்து உடனடியாக கூகுள் இந்த பிரச்சினையை பெரிதாகும் முன் சரிசெய்தது இப்படியே போனால் இணையம் என்ற வார்த்தையை கேட்டாலே பயந்து ஓடும் அளவுக்கு முக்கிய சேவைகள் ஸ்தம்பிக்கும் என்று நிபுணர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.
இந்த சிக்கலை உடனடியாக கவனிக்காமல் விட்டால் தங்களது பயனாளர் எண்ணிக்கை பாதிக்குமேல் குறைந்துவிடும் என்ற அச்சத்தால், என்ன செய்வது என்று நிறுவனங்களும் தீவிரமாக ஆலோசித்து வருகின்றன.

No comments:

Post a Comment